உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள்விழா தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்..!!
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையெர்டி தூத்துக்குடி அரசு மருத்துவமணையில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் தங்கமோதிரம் அணிவித்தார்.
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாநில இளைஞர் அணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று பிறந்த 9 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து, தாய்மார்களுக்கு, ஊட்டசத்து பரிசு பெட்டகங்களை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வழங்கினார்.
நிகழ்ச்சியில், மருத்துகல்லூரி டீன் சிவக்குமார், உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெயமணி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத் தலைவர் கலைச்செல்வி, மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், மாநகர துணைச்செயலாளர் கீதாமுருகேசன், பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரிதங்கம், மாவட்ட மருத்துவ அணி தலைவர் அருண்குமார், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருணாதேவி, தொழிலாளர் அணி அமைப்பாளர் முருகஇசக்கி, சிறுபான்மைஅணி அமைப்பாளர் சாகுல்ஹமீது, பொறியாளர் அணி தலைவர் பழனி, சுற்றுச்சூழல் அணி தலைவர் வினோத், கவுன்சிலர்கள் சரவணக்குமார், விஜயலட்சுமி, கந்தசாமி, ஜெயசீலி, பொன்னப்பன், வைதேகி, நாகேஸ்வரி, பவாணி, இசக்கிராஜா, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார், பகுதி தகவல்தொழில்நுட்ப அணி மார்க்கின் ராபர்ட், வட்டச்செயலாளர்கள் கதிரேசன், சிங்கராஜ், சுப்பையா, பாலகுருசாமி, கங்காராஜேஷ், மூக்கையா, செல்வராஜ், செந்தில்குமார், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், துரை மற்றும் மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments