உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா: தூய்மைப்பணியாளர்களுக்கு தூத்துக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் புதூர் சுப்பிரமணியன் நலத்திட்ட உதவிகள்..
தூத்துக்குடியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்நநாளையொட்டி மேலதட்டாப்பாறையில் தூய்மைப்பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் புதூர் சுப்பிரமணியன் வழங்கினார்.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட மேலத்தட்டப்பாறையில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. தூத்துக்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் புதூர் எஸ்.ஆர்.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் காவல்காடு சொர்ணகுமார் தலைமை வகித்தார். மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் வீரபாகு முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட இலக்கிய அணி துணை அமைப்பாளர் முடிவை ஆறுமுகம், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் பலவேசம், ஒன்றிய துணைச் செயலாளர் நாராயணன், ஒன்றிய பொருளாளர் சின்னராசா, மாவட்ட பிரதிநிதி ஆட்டோ கோபால், மாவட்ட பிரதிநிதி சிவலூர் மாரிச்செல்வம், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பரியேறும் பெருமாள், ஒன்றிய தகவல்தொழில்நுட்ப அணி அமைப்பாளர் முடிவை வசந்த், ஒன்றிய தொண்டரணி அமைப்பாளர் சங்கர், ஒன்றிய கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர்கள் அருண், சுபாஷ், கார்த்திக் மற்றும் கிளைக் கழகச் செயலாளர்கள் மாரியப்பன், கந்தசாமி, ரங்கநாதன், வரதராஜபுரம் சின்னராஜா, கீழத்தட்டப்பாறை கந்தசாமி, பிரபு ஸ்டாலின் உள்பட பலர் பங்கேற்றனர்.
செ.அந்தோணி இன்பராஜ், தூத்துக்குடி மாவட்ட செய்தியாளர்.
No comments