தூத்துக்குடி: பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கலந்துரையாடல்!
தூத்துக்குடியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலைமை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கலந்துரையாடல் நடைபெற்றது.
தூத்துக்குடியில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான விழிப்புணர்வு கலந்துரையாடல் நிகழ்ச்சி தூத்துக்குடி சுப்பையா வித்யாலயா மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலெக்ஸ், குழந்தை நலக்குழு தலைவர் ரூபன் கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டு குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான துண்டு பிரசுரங்கள் வெளியிட்டு, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் போக்ஸோ சட்டம் குறித்து எடுத்துக்கூறினர்.
தொடர்ந்து, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையால் சமீபத்தில் வெளியிடப்பட்ட அரண் என்ற குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான புத்தகம் அனைவருக்கும் வழங்கப்பட்டது. மேலும், நிகழ்ச்சியின் முடிவில் குழந்தைகளுக்கான அவசர உதவி என் 1098 தொடர்பான விழிப்புணர்வு பதாகை அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், சுமார் 220க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து பங்கேற்றனர்.
No comments