Breaking News

தரங்கம்பாடி கடற்கரையில் 10 அடிக்கு மேல் சீறிப்பாயும் அலைகள் ஆபத்தை உணராமல் புகைப்படம் எடுத்து மகிழும் சுற்றுலா பயணிகள்.

 


தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறி உள்ளது இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கடலோரப் பகுதிகளில் கடல் சீற்றம் அதிகரித்து காணப்படுகிறது குறிப்பாக வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத்தலமான தரங்கம்பாடி கடற்கரையில் பத்து அடிக்கு மேல் அலைகள் சீறி பாய்ந்து வருகிறது இதுவரை இல்லாத அளவிற்கு ஆக்ரோஷத்துடன் வரும் அலைகள் கருங்கல் தடுப்புச் சுவரைத் தாண்டி வருகிறது இந்நிலையில் ஆபத்தை உணராமல் தரங்கம்பாடி கடற்கரையில் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்து சீறிப்பாயும் அலைகளுக்கு இடையே நின்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர் இது போன்ற புயல் காலங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடற்கரைக்கு வர தடை விதித்து உரிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

No comments

Copying is disabled on this page!