வியாபாரிகள் கூட்டமைப்பினர் கண்டன பேரணி நடத்தி துணைநிலை ஆளுநரிடம் மனு அளித்தனர்.
இந்த நிலையில் வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட சட்டமன்ற உறுப்பினரை நேரடியாக சந்தித்து கொலை மிரட்டல் விடுத்த பிரபல ரவுடி மற்றும் அவரது கூட்டாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வியாபாரிகள் இன்று கண்டன பேரணி நடத்தினார்கள்.கோரிமேடு ஜிப்மர் அருகில் இருந்து புறப்பட்ட கண்டன பேரணிக்கு சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன் தலைமை தாங்க 300-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் இரு சக்கர வாகனத்தில் பேரணியாக புறப்பட்டனர்.
பேரணியானது கிழக்கு கடற்கரை சாலை, காமராஜர் சாலை, அண்ணா சாலை, நேரு வீதி வழியாக சட்டமன்றம் முன்பு வந்தடைந்தது. அங்கு போலீசார் அவர்களை தடுப்பு கட்டை அமைத்து தடுக்கவே கோரிக்கைகளை வலியுறுத்தி வியாபாரிகள் கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.இதனை அடுத்து துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதனை நேரில் சந்தித்த வியாபாரிகள்,வியாபாரிகளை மிரட்டி மாமுல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த ரவுடிகளை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.
No comments