புதுச்சேரி அருகே தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக குறுக்கு வழி தேர்வு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட வாலிபர் கைது.
புதுச்சேரி- திண்டிவனம் புறவழி சாலையில், தமிழக பகுதியான ஆண்டியார் பாளையம் பகுதியை சேர்ந்த ஏழுமலையின் மனைவி அலமேலு பிஸ்கட் விற்பனை செய்யும் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று மாலை தனியாக இருந்த அலமேலுவிடம், பிஸ்கட் வாங்குவது போல் சென்று அலமேலுவின் கழுத்தில் இருந்த தங்க சங்கிலி பறிக்க முயற்சி வாலிபர் ஒருவர் செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அலமேலு கூச்சலிட்டதை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அந்த வாலிபரை விரட்டிப்பிடித்து தர்ம அடி கொடுத்து, வானூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் கூட்டேரிப்பட்டு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மதன்குமார்(25) என்பது தெரியவந்துள்ளது இவர் சென்னை கோயம்பேட்டில் பழக்கடை வைத்திருப்பதும், தொழில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக திருட்டு தொழிலில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த வானூர் போலீசார் வாலிபர் மதன் குமாரை வானூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments