Breaking News

புதுச்சேரியில் அரசு பள்ளி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து கஞ்சா பொட்டலங்களை மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர்..

 


புதுச்சேரி மணவெளி பகுதியில் உள்ள தந்தை அரசு உயர்நிலைப்பள்ளி அருகே மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அரியாங்குப்பம் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் வந்தது. 

அதன் அடிப்படையில் தெற்கு எஸ்பி பக்தவச்சலம் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கதிரேசன், குற்றப் பிரிவு ஏ எஸ் ஐ சிரஞ்சீவி, குற்றப்பிரிவு தலைமைக் காவலர் வேல்முருகன் ஆகியோர் அங்கு விரைந்து சென்று கண்காணித்தனர்,

 போலீஸாரை கண்டதும் தப்பி ஓட முயன்ற இளைஞரை மடக்கி பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் முதற்கட்ட விசாரணையில்,அவர் மணவெளி, நேதாஜி நகரை சேர்ந்த சதீஷ்.(19) என்பதும், பள்ளி மாணவர்களிடம் கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், கஞ்சா பொட்டாலங்கள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

No comments

Copying is disabled on this page!