கார் சென்டர் மீடியம் மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை தொடர்ந்து ஈச்சர் லாரி கார் அடுத்தடுத்து மோதி விபத்து..
சென்னையில் இருந்து தேனிக்கு சென்று கொண்டிருந்த காரை தேனி மாவட்டம் உத்தமபாளையம் சேர்ந்த ஹரி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.அதன் பின்னால் உரம் லோடு ஏற்றி சென்ற ஈச்சர் லாரி சென்னையில் இருந்து மூணார் நோக்கி சென்று கொண்டிருந்தது.இந்த நிலையில் ஹரி என்பவர் ஒட்டி வந்த கார் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே சேந்தமங்கலம் வளைவு தேசிய நெடுஞ்சாலையில் ஓட்டுனரின் தூக்க கலக்கத்தால் சென்டர் மீடியங்களில் மோதி தலைக்குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தின் போது அந்த வழியாக வந்த ஈச்சர் லாரி திடீரென பிரேக் போட முயன்ற நிலையில் அதன் பின்னால் சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்த கீர்த்திவாசன் என்பவர் ஒட்டிச் சென்ற கார் ஈச்சர் லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் காரை அப்புறப்படுத்தும் பணி ஈடுபட்டு வருகின்றனர் போக்குவரத்துக் போலீசார்.
No comments