Breaking News

வழக்கறிஞர்களின் வாகனங்கள் கட்டணமின்றி செல்ல அனுமதிக்காததால் வழக்கறிஞர்கள் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம்..

 


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியில் வாகனங்களில் இருந்து கட்டணம் எடுக்காமல் அனுமதிக்க வேண்டும் எனக் கூறி தொடர்ந்து முற்றுகையிட்டனர் இதனால் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கறிஞர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர் அப்பொழுது அவர்கள் கோரிக்கை சுங்க நிர்வாகத்திடம் தெரிவிப்பதாக தெரிவித்ததை அடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் தொடர்ந்து வாகனங்கள் அனுமதிக்கப்பட்டதால் போக்குவரத்து சரி செய்யப்பட்டது வழக்கறிஞர்கள் முற்றுகை போராட்டம் காரணமாக உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல்ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.

No comments

Copying is disabled on this page!