ரூ.16 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள யோகா மையத்தை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்..
புதுச்சேரி முத்தியால்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.16 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள ஆரம்ப யோகா மையத்தின் திறப்பு விழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.விழாவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் குமார் கலந்து கொண்டு தலைமை தாங்கி புதிய யோகா மையத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி மருத்துவ துறை இயக்குனர் டாக்டர் செவ்வேல், துணை இயக்குனர் ஆரம்ப சுகாதார நிலையம் டாக்டர் ரகுநாத், முத்தியால்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் அஸ்வினி, ஹோமியோபதி டாக்டர் தனலட்சுமி, சித்தா டாக்டர் சாந்தி மற்றும் பொதுப்பணித்துறை கட்டிடப் பிரிவு உதவி பொறியாளர் ரவீந்திரன்,இளநிலை பொறியாளர் குமார் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments