தரங்கம்பாடியில் கொட்டி தீர்க்கும் கனமழை தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் முகாம் நேரில் ஆய்வு செய்து தயார் நிலையில் இருக்க உத்தரவிட்ட ஆட்சியர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தரங்கம்பாடி பொறையார் உட்பட பல்வேறு பகுதிகளில் குறிப்பாக கடலோர பகுதிகளில் இரண்டு நாட்களாக கனமழை மற்றும் மிக கனமழை பெய்து வருகிறது பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது தெருக்களில் குடியிருப்புகளை தண்ணீர் வந்துள்ளது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது இந்நிலையில் தரங்கம்பாடி தாலுகாவில் தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் முகாமிட்டுள்ளனர் பேரிடர் மீட்பு படையினரை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் அவர்கள் எப்பொழுதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டார் மேலும் பாதுகாப்பு உபகரணங்களை பார்வையிட்டு கேட்டறிந்தார் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் உடனடியாக துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவுறுத்தினார் அப்பொழுது வட்டாட்சியர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
No comments