நிதிஉதவியுடன் புற்றுநோய்க்கான சிகிச்சை தன்னலம் கருதாத மருத்துவர்கள்; நீளும் தங்கம் மருத்துவமனையின் சிறப்புகள்!!
இந்த நிகழ்ச்சியில் கரூர் வைசியா வங்கி சி எஸ் ஆர் தலைமை அதிகாரி வைத்தியநாதன் பேசுகையில், கரூர் வைசியா வங்கி சார்பில், நாமக்கல் தங்க மருத்துவமனை மருத்துவர்கள் பரிந்துரையின் கீழ் 100 பேருக்கு புற்றுநோய்க்கான சிகிச்சை பெற நிதியுதவி ரூ. 75 லட்சம் வழங்கி உள்ளோம். மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் தனியாக ஒன்றிணைந்து செயல்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவியாக செவிலியர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் திறம்பட பணியாற்றி மருத்துவமனைக்கு உதவியாக இருந்து வருவது பாராட்டுக்குரியது என்று பேசினார்.
அவரை தொடர்ந்து பேசிய நாமக்கல் தங்கம் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் இரா.குழந்தைவேல், எண்ணங்கள் தூய்மை, பொறுமை, நிதானம், விடாமுயற்சி ஆகிய மூன்றும் இருந்தால் வெற்றி அடையலாம் என்பதற்கு அடையாளமாக நாமக்கல் தங்க மருத்துவமனை செயலாற்றி வருகிறது. இங்கு சிகிச்சை பெற வரும் ஏழை எளிய நோயாளிகளுக்கு நாமக்கல்லில் உள்ள பெருங் கொடையாளர்கள், தன்னார்வலர்கள் நிதியுதவி வழங்கி வருகின்றனர். வெளிமாநில மற்றும் வெளிநாட்டவர்கள் 58 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளோம். மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவர்கள் தன்னலம் கருதாமல் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றனர். அதுவே இம் மருத்துவமனைக்கு சிறந்ததொரு சான்றாகும். மக்களின் நலன் கருதி அவர்களுக்கு எங்களால் ஆன உதவிகளையும் மேலும் தன்னார்வலர்களின் நிதி உதவிகளைக் கொண்டு ஏழை எளியவருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம் என்று பேசினார். இறுதியாக மருத்துவர் மகாலட்சுமி நன்றி கூறினார்.
#Immunotherapy_for_Lung_Cancer
No comments