ஸ்ரீ கங்கை முத்து மாரியம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள அருள்மிகு பிரகதீஸ்வரருக்கு நடைபெற்ற சங்காபிஷேகம்..
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட பெரியார் நகர் ஸ்ரீ கெங்கை முத்து மாரியம்மன் ஆலயத்தில் அமைந்துள்ள அருள்மிகு பிரகதீஸ்வரருக்கு 5ஆம் ஆண்டு அன்னாபிஷேகம், கார்த்திகை சோமவார பூஜை மற்றும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு நாள்தோறும் பிரகதீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதணை காண்பிக்கப்படும். விழாவில் முக்கிய நிகழ்வான நேற்று சங்காபிஷேகம் நடைபெற்றது. இதனையொட்டி சுவாமிக்கு பால், தயிர் உட்பட பல்வேறு திரவயங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
No comments