உளுந்தூர்பேட்டை அருகே பாலி கிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே பாலி கிராமத்தில் தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் கண்ணன் தமிழ் ஆசிரியர் அழகுலிங்கம் அனைவரையும் வரவேற்றனர், சிறப்பு அழைப்பாளர் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் அவர்கள் கலந்து கொண்டு 45 மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை ஒன்றிய குழு பெருந்தலைவர் ராஜவேல் மாவட்ட கவுன்சிலர் பிரியா பாண்டியன், ஒன்றிய கவுன்சிலர் ஜெயக்குமார் ஊராட்சி மன்ற தலைவர் மருதுபாண்டி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தங்க விஸ்வநாதன் உறுப்பினர்கள் வேலுச்சாமி,கணேசன், கேசவன், மற்றும் பள்ளியின் ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர் நன்றியுரை ஆசிரியர் வேல்முருகன் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் முடிவில் பள்ளியில் மரக்கன்றுகள் புதிய சிறகுகள் காவல் பயிற்சி நிறுவனர் அய்யாதுரை ஏற்பாட்டில் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஒன்றிய குழு தலைவர் ஆகியோர் மரக்கன்றுகள் நட்டு வைத்தனர்.
No comments