திருக்கோவிலூர் அருகே ஆக்கிரமிப்பு 144 வீடுகள் இடித்து அகற்றம்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள மேமாலூர் கிராமத்தில் ஏரி வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 144 வீடுகளை இடிக்கும் பணி நேற்று காலை தொடங்கியது. இது குறித்து கருணாநிதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏறி வாய்க்காலை ஆக்கிரமித்து 144 வீடுகள் கட்டப்பட்டு இருப்பதாகவும் அதனை அகற்றவும் வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் 144 வீடுகளையும் இடித்து அகற்ற உத்தரவிட்டது. இந்த உத்தரவை செயல்படுத்த விட்டால் மாவட்ட ஆட்சியர் மற்றும் உயர் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர். இந்த
உயர் நீதிமன்ற உத்தரவின்படி அதிகாரிகள் 3 முறை ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றபோது அங்கு தற்போது வசித்து வருபவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இன்று காலை 400க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் இடிக்கும் பணிகள் தொடர்ந்து ஆக்கிரமிப்பு பகுதிகள் அகற்றும் பணியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.
No comments