மருத்துவ செலவிற்காக அடமானம் வைத்து பணம் வாங்கிய நிலத்தை போலி பத்திரம் செய்து விற்பனை செய்த நிதி நிருவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கபட்ட பெண் கோவை காவல் ஆனையரிடம் மனு.
இதனையடுத்து பானுமதி அடமானம் வைத்த இடத்தின் சர்வே எண்ணை கொண்டு வில்லங்க சான்றிதழ் எடுத்து பார்த்த போது தான் சன்முகம் தன்னிடம் இருந்து கடன் அடமான பத்திரம் எழுதாமல் பொது அதிகார பத்திர ஆவணத்தை எழுதி வாங்கியுள்ளார் என்ற விவரம் தெரியவந்ததோடு, பாத்திரத்தை போலியாக தனது பெயரில் மாற்றம் செய்ததோடு ரூ.4 கோடி மதிப்பிலுள்ள தனது நிலத்தை அதிமுகவை சேர்ந்த பிரமுகர்களுக்கு விற்பனை செய்துள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வந்த பானுமதி கடன் அடமானம் வைத்த தனது நிலத்தை போலி பத்திரம் செய்து விற்பனை செய்த சன்முகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தனக்கு சொந்தமான நிலத்தினை தனக்கு மீட்டு கொடுக்க வேண்டுமெனவும் கோரி கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்தார்.
மேலும் தனது நிலம் தொடர்பாக கேட்டதற்கு சன்முகம் கொலை மிரட்டல் விடுவதாகவும் கூறியவர் தனக்கும் தனது குடும்பத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமெனவும், தனக்கு பாத்தியபட்ட நிலத்தை மீட்டு கொடுக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தார்.
No comments