புதுப்பாளையம் வார்டு தென்னஞ்சாலை ரோடு பகுதி கண்ணன் நகர் கோவிந்த பிள்ளை வீதியில் புதிய சிமெண்ட் சாலை பணி..
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட புதுப்பாளையம் வார்டு தென்னஞ்சாலை ரோடு பகுதி கண்ணன் நகர் கோவிந்த பிள்ளை வீதியில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிக்காக உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான நேரு(எ)குப்புசாமி மேற்கண்ட பகுதியில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ள உள்ளதால் புதிய பாதாள கழிவுநீர் சாக்கடை இணைப்புகள் வழங்குவது குறித்தும் புதிய மின் கேபிள் அமைப்பது குறித்தும் புதிய குடிநீர் குழாய்கள் அமைப்பது குறித்தும் சரியான வாட்டங்கள் வைத்து மழை காலங்களில் மழை நீர் எளிதாக வெளியேறும் வகையில் வடிவமைப்பு செய்வதற்காக அரசுத்துறை அதிகாரியுடன் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன்
பொதுப்பணித்துறை கட்டிடங்கள் மற்றும் சாலைகள் மத்திய பிரிவு செயற்பொறியாளர்
சீனிவாசன் நகராட்சி உதவி பொறியாளர் நமச்சிவாயம் பொதுப்பணித்துறை பொது சுகாதார குடிநீர் வழங்கல் பிரிவு இளநிலை பொறியாளர் வெங்கடேசன்,பொதுப்பணித்துறை பொது சுகாதார கழிவுநீர் உட்பட்ட பிரிவு
இளநிலை பொறியாளர் சங்கர்,
மின்துறை இளநிலை பொறியாளர் கார்த்திகேயன்
புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர் குணசேகரன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளும் நகராட்சி அதிகாரிகளும் மின் துறை அதிகாரிகளும் பலர் உடன் இருந்தனர் மேலும் ஆய்வின்போது புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்கள் பலர் உடன் இருந்தனர்.
No comments