மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
மயிலாடுதுறை மாவட்டத்தில் துலா உற்சவ முக்கிய திருவிழாவான கடைமுகத் தீர்த்தவாரி விழாவினை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்திற்கு எதிர்வரும் 15.11.2024 (வெள்ளிக்கிழமை) அன்று உள்ளுர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடுமுறை தினத்தில் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து சார்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் எனவும் மேலும் இந்த உள்ளுர் விடுமுறை நாளை ஈடுசெய்யும் வகையில் வருகின்ற 23.11.2024 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவிக்கப்படுகிறது என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி தெரிவித்துள்ளார்.
No comments