பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.ஆர்.டி.சி., தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..
புதுச்சேரி பி.ஆர்.டி.சி., தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சட்டசபை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் பாஸ்கரன், அருள்மலை, கோவிந்தன்,குமரகுரு, தீனதாயாளன், ரவிச்சந்திரன், ராதகிருஷ்ணன், முனுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், தினக்கூலி, ஒப்பந்த ஓட்டுனர், நடத்துனர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.நிலுவையில் உள்ள அலவன்ஸ் வழங்க வேண்டும், 10 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்யும் 200க்கும் மேற்பட்ட மகளிர், நடத்துனர்கள், ஒப்பந்த ஓட்டுனர், நடத்துனர்களை பனி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது. வெங்கடேசன் நன்றி கூறினார்.
No comments