சுல்தான்பேட்டை ராஜா நகரில் ரூ. 38 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணி எதிர்க்கட்சித் தலைவர் சிவா துவக்கி வைத்தார்.
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்றத் தொகுதி, சுல்தான்பேட்டை, ராஜா நகர் வாய்க்கால் தொடர்ச்சி மற்றும் அப்துல் கலாம் நகர் பகுதியில், பொதுப்பணித்துறை நீர்ப்பாசனக் கோட்டம் மூலம் ரூபாய். 38 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை ராஜா நகரில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா கலந்து கொண்டு கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணியினை பூஜை செய்து துவக்கி வைத்தார். இதில், பொதுப்பணித்துறை நீர்பாசன கோட்ட செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், உதவிப் பொறியாளர் லூயி பிரகாசம், இளநிலைப் பொறியாளர் கணேசன் மற்றும் திமுக நிர்வாகிகள், ஜமாத்தார்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், பொதுமக்கள், கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.
No comments