Breaking News

வன அலுவலரை மாற்றக்கோரி த.வி. இ.மாநிலத் தலைவர் கருப்பையா மனு அனுப்பியுள்ளார்.


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனக்கோட்டம் மாவட்ட வன அலுவலராக பணியாற்றும் யோகேஷ் குலால் விலாஸ் எனபருக்கு தமிழ் தெரியாது.மேலூம் அலுவலகத்தில் குறிப்பாக பெண் பணியாளர்களை வீடியோ கேமிரா மூலமாக அவர்களின் பணிகளை கண்காணிப்பதாக மிரட்டி மன உலச்சலுக்கு ஆளாக்குகிறார்.

குறிப்பாக மூன்று மாதங்களுக்கு முன்பாக முடிந்த பணிகளுக்கு பில் வழங்காமல் பணிகளில் குறையுள்ளதாக  கூறி காலம் கடத்துகிறார். விவசாயிகளிடமும்,பொதுமக்களிடமும் தமிழ் தெரியாத காரணத்தால் அவர்களின் குறைகளை கேட்க மறுத்து கோரிக்கை மனுக்களை வாங்க மறுக்கிறார்.

அந்த பகுதிகளை சார்ந்த வனத்துறை ஒப்பந்ததார்களை சந்திக்காமல் பல மணி நேரம் அலுவலகத்தில் காத்திருக்க வைப்பதும் போன்ற பல குற்றச் சாட்டுகளுக்கும் தமிழ் தெரியாத சத்தியமங்கலம் வனக்கோட்ட அலுவலரை மாற்றம் செய்து தமிழரை மாவட்ட வனக் கோட்ட அலுவலராக நியமிக்க கோரி தலித் விடுதலை இயக்கத்தின் மாநிலத் தலைவர் ச. கருப்பையா தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார். 

No comments

Copying is disabled on this page!