முரசொலிமாறன் நினைவு தினத்தையொட்டி அவரது திருஉருவ படத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுகவினர் மலர் தூவி மரியாதை..
புதுச்சேரி மாநில திமுக சார்பில், மறைந்த திமுக மூத்த நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான முரசொலிமாறனின் 21–வது நினைவு தினம், திமுக தலைமை அலுவலகத்தில் இன்று அனுசரிக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட முரசொலி மாறனின் திருவுருவப் படத்திற்கு மாநில அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சிவா தலைமையிலான திமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்ச்சியில் அவைத் தலைவர் எஸ்.பி. சிவக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் அனிபால் கென்னடி,சம்பத் உட்பட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு முரசொலி மாறன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
No comments