நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் எழுச்சி நாள் விழா கொண்டாட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் இன்று காலை 11 மணியளவில் ஊராட்சி செயலாளர்கள் எழுச்சி நாள் விழா மாநிலத் தலைவர் ஜான் போஸ்கோ பிரகாஷ் வழிகாட்டுதலின்படி மாவட்ட சங்கத் தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக நாட்றம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் வெண்மதி முனிசாமி கலந்துகொண்டு ஊராட்சி செயலாளர்கள் சங்க கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்கள்.
உடன் ஊராட்சி செயலாளர்கள் மாவட்ட சங்கத் தலைவர் ராஜமாணிக்கம் செயலாளர் மேகநாதன் பொருளாளர் மீனா, பிரதன் மாநில செயற்குழு உறுப்பினர் குமரேசன் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அலுவலக பணியாளர்கள் மண்டல வட்டார வளர்ச்சி அலுவலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
No comments