Breaking News

பெஞ்சல் புயல் எதிரொலி, மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடல் அரிப்பு காரணமாக படகை நிறுத்த முடியாமல் மீனவர்கள் அவதி..

 


வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள பெஞ்சல் புயல் காரணமாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் கடற்கரையோர மீனவ கிராமங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. புதுக்குப்பம், பூம்புகார் வானகிரி, மாணிக்கப்பங்கு, சின்னங்குடி, புதுப்பேட்டை, குட்டி ஆண்டியூர், வெள்ளக்கோயில் தரங்கம்பாடி என அனைத்து பகுதிகளிலும் கடல் சீற்றம் காரணமாக கரை அரிப்பு பலமாக ஏற்பட்டுள்ளது. மேலும் மீன்பிடி துறைமுகங்களில் படகு இறங்கு தளம் சேதமடைந்துள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் படகை கரையில் நிறுத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் புதுப்பேட்டை, வெள்ளக்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் கடல் நீர் உப்புகந்த நிலையில் தண்ணீர் வடிய முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது,சின்னங்குடி பகுதியில் கடற்கரை ஓரத்தில் சுடுகாடு பாதை அரிக்கப்பட்டு நிலையில், மீனவர்களின் வலை பின்னும் கூடம் சேதம் அடைந்துள்ளது தங்களது கிராமத்திற்கு கடல் அரிப்பை தடுக்க அரசாங்கம் நடக்கவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களுக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக மாவட்ட செயலாளருமான எஸ் பவுன்ராஜ் நேரில் சென்று மீனவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். வாகனம் செல்ல முடியாத இடங்களுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று பாதிப்புகளை பார்வையிட்டார். பாதிப்புகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments

Copying is disabled on this page!