Breaking News

பழமையான அமைச்சார் அம்மன் கோவில் சரிவர பராமரிக்காமல் இருந்த நிலையில் கோவிலை இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு.


உளுந்தூர்பேட்டையில் உள்ள மிகவும் பழமையான அமைச்சார் அம்மன் கோவில் சரிவர பராமரிக்காமல் இருந்த நிலையில் கோவிலை இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு கோவிலை கட்டுவதற்காக  பாலாயணம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் உள்ள மிகவும் பழமையான அமைச்சார் அம்மன் கோவில் சரிவர பராமரிக்காமல் சிதிலமடைந்து இருந்தது இந்த நிலையில் இந்த கோவிலை இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் பார்வையிட்டு வந்த நிலையில் முட்பூதர்களை அகற்றி சீரமைத்து கோவிலில் புதிதாக கட்ட இன்று காலை பாலாயணம் நடைபெற்றது. முன்னதாக கோவிலின் முன்பு விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது இதைத் தொடர்ந்து யாகசாலையில் புனித நீர் அடங்கிய கலசம் வைக்கப்பட்டு கலச பூஜை செய்யப்பட்ட பின்பு  யாக சாலை பூஜை நடைபெற்றது.

அப்போது தேன் பொங்கல் பால் தயிர் மற்றும் பல்வேறு வகையான பழங்கள், பல்வேறு வகையான மூலிகை பொருட்களைக் கொண்டு தீபாராதனை செய்யப்பட்டு யாகம் நடைபெற்றது இதில் இந்து அறநிலைத்துறை செயல் அலுவலர் மதனா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். யாகபூஜையில் கலந்து கொண்ட பெண் சிலர் சுவாமி வந்து ஆடினர். 

No comments

Copying is disabled on this page!