புதுச்சேரியில் பகுதி நேர வேலை வாங்கித் தருவதாகக் கூறி 4 பேரிடம் ரூ.8.95 லட்சம் மோசடி..
புதுச்சேரி கோவிந்தசாலையைச் சோ்ந்தவா் சரண்யா. இவா் பகுதி நேர வேலை தேடிவந்துள்ளாா். அப்போது இணையவழியில் அவரைத் தொடா்புகொண்ட மா்ம நபா் வீட்டிலிருந்தே வேலை பாா்க்கலாம் எனக்கூறி சில புதிா்களை விடுவிக்க பதிலளிக்கக் கூறியுள்ளாா். அதன்படி முதலீடு செய்த சரண்யாவுக்கு லாபம் கிடைப்பது போல இணையத்தில் காட்டப்பட்டுள்ளது. ஆனால், அவரால் முதலீடு, லாபத்தை பெறமுடியவில்லை. அதன்படி அவா் ரூ.1.01 லட்சம் இழந்துள்ளாா்.
புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியைச் சோ்ந்த பாலசுந்தரம் என்பவரிடம் பகுதி நேர வேலை எனக்கூறி ரூ.1.79 லட்சத்தையும், புதுச்சேரியைச் சோ்ந்த கனகவள்ளி என்பவரிடம் பகுதி நேர வேலை எனக்கூறி ரூ.5 லட்சமும், புதுச்சேரி நடேசன் நகா் பகுதியைச் சோ்ந்த விக்னேஷிடம் ரூ.1.15 லட்சமும் ஏமாற்றியுள்ளனா்.
இவை குறித்த புகாா்களின் பேரில் இணையவழிக் குற்றப்பிரிவினா் வழக்குப் பதிந்து விசாரித்துவருகின்றனா்.புதுச்சேரியில் மக்களிடையே இணையவழி மோசடி குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்திவரும் நிலையில், 4 பேரிடம் மொத்தம் ரூ.8.95 லட்சத்தை ஏமாற்றி மோசடி செய்திருக்கின்றனா்.
No comments