Breaking News

நிவேதா எம்.முருகன் தலைமையில் நடைபெற்றது சீர்காழி தாலுக்காவில் பாகநிலை முகவர்கள் (பி.எல்.ஏ - 2) ஆலோசனை கூட்டம்..

 


மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவிற்க்கு உட்பட்ட சீர்காழி கிழக்கு ஒன்றியம் மேற்கு ஒன்றியம் மற்றும் கொள்ளிடம் கிழக்கு ஒன்றியம் மேற்கு ஒன்றியம் சார்பாக நடைபெற்ற பாகநிலை முகவர் ஆலோசனை கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் நிவேதா.எம்.முருகன் எம்.எல்.ஏ தலைமைவகித்தார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பங்கேற்று சிறப்புரையாற்றினார் இந்நிகழ்வில் சீர்காழி சட்டபேரவை உறுப்பினர் எம். பன்னீர் செல்வம், ஒன்றிய செயலாளர்கள் பஞ்சுகுமார், பிரபாகரன், ரவிக்குமார், மலர் விழிதிருமாவளவன், மாநில வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் சீர்காழி சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் மு.தினேஷ்குமார் தஞ்சை மண்டல தகவல் தொழில் நுட்ப அணி பொறுப்பாளர் பி எம் ஸ்ரீதர் மற்றும் ஒன்று குழு தலைவர்கள் மாவட்ட கவுன்சிலர்கள் கட்சியின் பாகமுகவர்கள் கலந்து கொண்டனர் . கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் பங்கேற்று பேசுகையில்,....

பாராளுமன்ற தேர்தலில் புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது போல், வரும் 2026 சட்டபேரவை தேர்தலிலும் 200 க்கு மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணிக்கு வெற்றி மாலையை பெற்றுத்தர வேண்டும் அதற்கு கட்சியினர் உழைத்திட வேண்டும்கடந்த 10 ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழகத்தில் எந்தவித வளர்ச்சியும் ஏற்படவில்லைஎடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த போது தமிழகத்தில் உரிமைகளை மத்திய அரசிடம் விட்டு தந்து விட்டார்.திமுக ஆட்சி அமைந்ததும் முதல்வராக இருந்தாலும் பொறுப்பேற்று சிறப்பாக ஆக்கிக் கொடுத்து வருகிறார் நாள் ஒன்றுக்கு 20 மணி நேரம் மக்கள் அதற்காக உழைத்து வருகிறார்இந்தியாவிலேயே அனைத்து முறைகளிலும் தமிழகம் முதன்மை மாநிலம் வருகிறது என்றார்

கனமழையில் போது இரவு, பகல் பாராமல் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிததி சிறப்பாக செயல்பட்டார். உதயநிதி பிறந்தநாள் தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.சமுக நீதியை பாதுகாக்கும் படை தலைவர்களாக பார்கிறேன்.இதில் நிர்வாகிகள் ராஜா நாகராஜ் சின்னப்பா இளங்கோவன் மற்றும் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

No comments

Copying is disabled on this page!