Breaking News

தரங்கம்பாடி அருகே பொலிரோ கார் மீது அதிவேகமாக சென்ற அரசு பேருந்து மோதி விபத்து எட்டு பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி..

 


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த ஆலவேலி கிராமத்தைச் சேர்ந்த அழகு ராஜன் என்பவர் குடும்பத்தினருடன் அவருக்கு சொந்தமான காரில் வேளாங்கண்ணி சென்று விட்டு வீடு திரும்பியுள்ளார் அப்பொழுது தரங்கம்பாடி உப்பனாற்று பாலம் அருகே கார் வந்தபோது எதிரே சிதம்பரத்திலிருந்து வந்த அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக கார் மீது மோதியுள்ளது இவ்விபத்தில் அழகு ராஜன் குடும்பத்தினர் உறவினர்கள் உட்பட எட்டு பேர் படுகாயம் அடைந்தனர் உடனடியாக அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்து காரில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் விபத்து குறித்து அழகு ராஜன் கொடுத்த புகாரின் பேரில் அரசு பேருந்து ஓட்டுநர் திவாகர் என்பவரை காவல் நிலையம் கொண்டு சென்று பொறையார் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments

Copying is disabled on this page!