வஃபு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிராக இஸ்லாமிய பெண்களின் பரபரப்பு போராட்டம்
ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தவ்ஹீத் ஜமாத்தின் மாவட்ட தலைவர் சாகுல் தலைமை வகித்தார். அந்த அமைப்பின் மாநில செயலாளர் காரைக்கால் யூசுப் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, மத்திய அரசு முஸ்லிம் அல்லாத இரண்டு நபர்களை வஃபு வாரிய உறுப்பினராக நியமிக்க கூடிய நடைமுறையை பாஜக ஆளும் மாநிலங்களில் அமுல்படுத்தி இருக்கிறது.
இதன்மூலம் வஃபு வாரியத்தை பலவீனப்படுத்தி அதன் நிலங்களை அபகரிக்க பயன்படுத்தப்படும் என்றும், சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்றும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இது குறித்து மாநில செயலாளர் காரைக்கால் யூசுப் கூறுகையில், வஃபு வாரியத்தை நீர்த்து போகும் வகையில் சட்டத்திருத்த மசோதா கொண்டுவர கொண்டுவரப்பட்டுள்ளது, என்றும் இந்த சட்ட திருத்த மசோதாவை திரும்ப வரும் வரை போராட்டம் தொடரும் என்றும் கூறினார். வஃபு வாரியத்தை பலவீனப்படுத்தி நிலங்களை அபகரிக்க மட்டுமே இது பயன்படுத்தப்படும் என்றும் கருத்து கூறினார் .
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் மொய்தீன் பாஷா, துணைச் செயலாளர் இஜாஸ் அஹமத் உட்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
No comments