மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை பொதுமக்கள் பிடித்து தருமடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ரகுநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவரின் 17 வயது மகள் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வீட்டில் இருந்தார், சிறுமியை வீட்டில் விட்டுவிட்டு வெளியூர் சென்றுள்ளார் அப்பொழுது மாடுகள் வாங்குவதற்காக வந்த எறையூர் கிராமத்தைச் சேர்ந்த பவுல் பீட்டர் என்பவர் மாரிமுத்து வீட்டிற்கு சென்றுள்ளான், அப்போது வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த பவுல் பீட்டர் தனியாக இருந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
அப்பொழுது அருகில் இருந்த ஒரு சிறுவன் இதை பார்த்து கூச்சலெடுவே பவுல் பீட்டர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டான், பின்னர் சிறுமியின் உறவினரிடம் அந்தச் சிறுவன் நடந்ததைப் பற்றி தெரிவிக்கவே எறையூர் கிராமத்திற்கு சென்ற உறவினர்கள் பவுல் பீட்டரை பிடித்து ரகுநாதபுரம் கிராமத்திற்கு கொண்டு வந்தனர் பின்னர் சிறுவன் அடையாளம் காட்டவே பவுல் பீட்டரை பொதுமக்கள் தருமடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர் தொடர்ந்து பவுல் பீட்டரை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments