Breaking News

சீர்காழி அருகே  கொள்ளிடத்தில் மாவட்ட அளவில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பரிசு பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

 


மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் சீனிவாசா மெட்ரிக் மேல் நிலை பள்ளியில் 2024 ஆம் ஆண்டின் முதல்வர் கோப்பை காண பரிசுப் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா  நடைபெற்றது. இதில் இப்பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கிரிக்கெட் வாலிபால் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளிலும் யோகாவிலும் மாவட்ட அளவில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா பள்ளியில் நேற்று நடைபெற்றது. ஒன்றியக் குழு தலைவர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் முருகேசன் வரவேற்றார். ஒன்றிய குழு துணைத் தலைவர் பானு சேகர், ஒன்றிய செயலாளர் செல்லசேதுரவிக்குமார் முன்னிலை வகித்தனர். சீர்காழி எம்எல்ஏ பன்னீர்செல்வம் கலந்து கொண்டு  முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில்

 மாவட்ட அளவில் முதல் மற்றும் இரண்டாம் இடங்களில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார். பெற்றோர் ஆசிரியர்கள் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி முதல்வர் கனகசபை நன்றி கூறினார்.

No comments

Copying is disabled on this page!