ஏரி துார்வாரும் பணி மற்றும் சிலுக்காரிப்பாளையம் பம்பையாற்றில் பாதுகாப்புச்சுவர் கட்டுமான பணிக்கான பூமி பூஜை..
புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்டத்தின் சார்பில், திருபுவனை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சோரப்பட்டு புது ஏரியில் ரூ.12.15 லட்சம் செலவில் துார்வாரி புணரமைக்கும் பணி தொடங்கியது.
நிகழ்ச்சிக்கு திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ., அங்காளன் தலைமையேற்று, பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து புதுச்சேரி அரசு பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்டத்தின் சார்பில் திருபுவனை தொகுதிக்குட்பட்ட சிலுக்காரிப்பாளையம் பம்பையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை அருகே ஆற்றின் தென் கரையில் ரூ.19.14 லட்சம் செலவில் பாதுகாப்புச்சுவர் கட்டுமான பணிக்கான பூமி பூஜையை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் தலைமையேற்று பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை நீர்ப்பாசன கோட்ட செயற்பொறியாளர் இராதாக்கிருஷ்ணன், உதவிப்பொறியாளர் மதிவாணன், இளநிலைப் பொறியாளர் ஜெயராமன், ஒப்பந்ததாரர் சாய் புவனா கன்ஸ்ரக்ஷன் உரிமையாளர் மற்றும் ஒப்பந்ததாரர் டி.தங்கராசு மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் உள்பட சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.
No comments