Breaking News

காரைக்காலில் உலக மீனவர் தினத்தை முன்னிட்டு படகு போட்டி நடைபெற்றது. இதனை ஆளுநர் கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தார்‌.


உலக மீனவர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் மீன்வளத்துறை சார்பில் கடற்கரை சாலையில் மீனவர்கள் இடையிலான படகு போட்டி நடைபெற்றது. இந்த படகு போட்டியை புதுச்சேரி மாநிலத் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இந்த படகு போட்டியில் 11 மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் கலந்து கொண்டனர். மேலும் படகு போட்டியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் காரைக்கால் கடற்கரைக்கு வருகை தந்தனர். படகு போட்டியில் மண்டபத்தூர் மீனவ கிராமத்தை சேர்ந்த படகு முதலாம்.

இடத்தையும் காளிகுப்பம் மீனவ கிராமத்தை சேர்ந்த படகு இரண்டாவது இடத்தையும் பட்டினச்சேரி மீனவ கிராமத்தை சேர்ந்த படகு மூன்றாவது இடத்தையும் பிடித்தது. இதனை அடுத்து வெற்றி பெற்ற மீனவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் பரிசு மற்றும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.


No comments

Copying is disabled on this page!