கமல்ஹாசனின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு உணவு அருந்த நிழற்குடை..
புதுச்சேரி மாநிலம், கொத்தபுரிநத்தம் அரசு உயர்நிலை பள்ளியில் பிரான்ஸ் கமல்ஹாசன் நற்பணி மன்றம் சார்பில் கமல்ஹாசனின் 70வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு உணவு அருந்த நிழற்குடை அமைத்து தந்தனர். இந்நிகழ்ச்சிக்கு புதுவை கல்வி துறை சி.இ.ஒ மோகன் தலைமை வகித்தார், பள்ளி தலைமை ஆசிரியர் லட்சுமி காந்தம் மற்றும் குணசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓவிய ஆசிரியர் கலைமாமணி பச்சையப்பன் வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் கமல்ஹாசன் நற்பணி மன்றத்தின் உறுப்பினர் குளோத்தின் குணசேகர் கலந்து கொண்டு நிழற்குடையை திறந்து வைத்தார்.
மேலும் மாணவ மாணவியர்களுக்கு இனிப்பு மற்றும் கேக், குணசேகர் குளோத்தின் வழங்கினார். நிகழ்ச்சியில் வாஞ்சிநாதன் இளந்தொண்டர் மன்ற நிறுவனர் இராமன் , நிழற்குடை அமைத்த சூர்யா இஞ்சினியரிங் உரிமையாளர் கண்ணன், பள்ளியின் இருபாலர் ஆசிரியர்கள், குமுகாயம் நண்பர்கள் வட்டம் பரசுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments