Breaking News

செவிலியர் தாக்கப்பட்டதை கண்டித்தும் செவிலியர்களுக்கு பாதுகாப்பு கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம்.


வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் தமிழ்நாடு எம் ஆர் பி செவிலியர் மேம்பாட்டு கழகம் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செவிலியர் தாக்கப்பட்டதை கண்டித்தும் செவிலியர்களுக்கு பாதுகாப்பு கோரியும் மாபெரும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் பா. தீனதயாளன்  தலைமை தாங்கினார் முன்னதாக மாவட்ட செயலாளர் மா. இனியா வரவேற்று  பேசினார் மாவட்டத் தலைவர் எம். சத்யா முன்னிலை வகித்தார் மாநிலத் துணைத் தலைவர்  ச. ஹேமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். 

இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் செ. நா. ஜனார்த்தனன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் மாவட்ட செயலாளர் பா. வேலு  மத்திய செயற்குழு உறுப்பினர் இளம் தமிழ் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள் இந்நிகழ்ச்சியின் முடிவில் கேத்ரின் நன்றி கூறிய நிலையில் நிகழ்ச்சி முடிந்தது.

- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்.

No comments

Copying is disabled on this page!