சூரசம்ஹார விழா. இக்கோயிலில் மட்டும்தான் சிவபெருமானிடம் வேல் வாங்கி,அம்மனிடம் உத்தரவு பெற்று முருகப்பெருமான் சூரனை வதம் செய்த நிகழ்வு..
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு உட்பட்ட தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாதர் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் தனி சந்திதியில் செல்வமுத்துக்குமாரசாமி அருள் பாலிக்கிறார். இங்கு கடந்த 2-ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. வள்ளி தெய்வானை உடனாகிய செல்வமுத்துக்குமார சுவாமி எதாஸ்தானத்திலிருந்து தையல்நாயகி அம்மன் சன்னதி எழுந்தருளி அங்கு முருகப்பெருமானுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் வழிபாடுகள் நடைபெற்று வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வாக சூரசம்ஹார விழா நடைபெற்றது. முன்னதாக செல்வமுத்துக்குமாரசுவாமி கிருத்திகை மண்டபம் எழுந்தருளி அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் தங்க கொடிமரம் செல்வ முத்துமாரசாமி எழுந்தருளினார். பின்னர் கோயில் மூலவர் வைத்தியநாதர் சுவாமியிடம் இருந்து சூரனை வதம் செய்ய முருகப்பெருமான் வேல் வாங்கும் ஐதீகம் நடைபெற்றது. வேல் வாங்கிய முருகப்பெருமான் அம்மனை வழிபட்டு அனுமதி பெற்று தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி செண்பக மலர் திரு ஆபரணங்கள் அலங்காரத்தில் எழுந்தருளி கோயிலை வலம் வந்து மேற்கு கோபுரம் வழியாக புறப்பாடு நடந்தது. தொடர்ந்து முருக பெருமான் சூரனை வதம் செய்யும் ஐதீக நிகழ்வு நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட சிறு தேரில் பக்தர்கள் படம் பிடித்து வீதி உலா நடைபெற்றது. இதில் கோயில் கட்டளை திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள், பங்கேற்றார்.
No comments