Breaking News

கல்வித்துறை கட்டிடத்தில் உள்ள இரண்டு லிப்டுகளும் இயங்காததால், அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களும் அலுவலர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

 


புதுச்சேரி, இந்திரா காந்தி சதுக்கம் அருகில் அமைந்துள்ளது கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது காமராஜர் வளாகம். இங்கு பொதுமக்கள் மற்றும் அலுவலர்கள் பயன்பாட்டிற்காக இரண்டு லிப்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இரண்டு லிப்டுகளில் ஒன்று சரிவர இயங்கவில்லை என கூறப்பட்டுவந்த நிலையில் கடந்த சில வாரங்களாக மற்றொரு லிப்டும் பழுது ஏற்பட்டு இயங்கவில்லை.

அரசு கட்டிடத்தில் ஏற்படும் இயந்திர கோளாறுகளை கூட உடனடியாக சரி செய்யாமல் இவ்வாறு கிடப்பில் போடப்பட்டுள்ளது பொதுமக்களை அதிருப்தி அடைய செய்துள்ளது. அதுமட்டுமின்றி இரண்டு லிப்டுகளுமே இயங்காத காரணத்தால் அந்த அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களும் அலுவலர்களும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். 


No comments

Copying is disabled on this page!