Breaking News

பிரியங்கா காந்தியை ஆதரித்து வயநாடு தொகுதியில புதுச்சேரி ராகுல் காந்தி தேசிய பேரவை தலைவர் ஆர்.இ‌‌ சேகர் தலைமையில் நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்..

 


கேரள மாநிலம் வயநாடு தொகுதி மக்களவை தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுகிறார்.அவரை ஆதரித்து காங்கிரஸ் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில், வயநாடு மாவட்ட தலைவர் முன்னாள் எம்எல்ஏ என்.டி அப்பச்சன் ஆலோசனைப்படி,புதுச்சேரி ராகுல் காந்தி தேசிய பேரவை தலைவர் ஆர்.இ‌ சேகர் தலைமையில்,பேரவை துணை தலைவர் திருவேங்கடம் முன்னிலையில் பேரவை நிர்வாகிகள் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் தயாளன், புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் சமீர்,காரைக்கால் மாவட்ட பொது செயலாளர் வி.என் ரகுபதி,அசோகன், பிரபு, மோகன்ராஜ், அமேதி தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுபம், பொதுச் செயலாளர் சுரத் சிங், அகில இந்திய சிறுபான்மை பிரிவு தலைவர் பிரசாத் நாயுடு மற்றும் சேவா தள தொண்டர்கள் உட்பட காங்கிரஸார் திரளானோர் கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

No comments

Copying is disabled on this page!