புதிய ரேஷன் கடை அமைக்க ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கிய எம்எல்ஏ:- புதிய கட்டடம் அமைக்க அடிக்கல் நாட்டி பணிகளை தொடக்கி வைத்தார்:-
மயிலாடுதுறை நகராட்சி 28-வது வார்டு பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கூறைநாடு பகுதியில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. 700 குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருள்கள் வாங்குவதற்கு 2 கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டியுள்ளதால், 28 வது வார்டில் ரேஷன் கடை அமைத்து தர அப்பகுதி மக்கள் மயிலாடுதுறை எம்எல்ஏவிடம் நீண்டகாலமாக கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்று 2023-24 எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா பூமி பூஜை இன்று நடைபெற்றது. மயிலாடுதுறை நகராட்சி தலைவர் செல்வராஜ், ஆணையர் சங்கர் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் மயிலாடுதுறை எம்எல்ஏ ராஜகுமார் கலந்துகொண்டு பூமிபூஜை செய்து ரேஷன் கடை கட்டுவதற்கான பணிகளை அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார். இதில் உதவி பொறியாளர் மனோகர், நகர்மன்ற உறுப்பினர் சுதாமுரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
No comments