குடியாத்தம் ரோட்டரி சங்கம் சார்பில் மெமோகிராஃபி பேருந்து வாங்க ரூ. 8.40 லட்சம் நிதி உதவி.
மேலும் கர்ப்பப்பை புற்றுநோய் கண்டறியும் வசதியும் இந்த பேருந்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது பெண் மருத்துவர்கள், பெண் செவிலியர்கள், பெண் உதவியாளர்கள் என அனைவர்களையும் பெண்கள் கொண்டு பரிசோதிக்கப்படும் திட்டமாகும் 182.542 அமெரிக்க டாலர் மதிப்புள்ள இந்த திட்டத்திற்கு சர்வதேச ரோட்டரி ஒப்புதல் சமீபத்தில் வழங்கப்பட்டது.
இதற்கு ரோட்டரி மாவட்டத்தின் பங்களிப்பான சுமார் 53 ஆயிரம் அமெரிக்க டாலர் செலுத்த வேண்டிய நிலையில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பொறுப்பாளர்கள் நிதி வழங்கி வருகிறார்கள் இந்நிலையில் குடியாத்தத்தை சேர்ந்த ஹபீப் டானிங் உரிமையாளர் ஏ. அத்திகுர் ரஹ்மான் பத்தாயிரம் அமெரிக்க டாலருக்கான ( இந்திய ரூபாய் மதிப்பில் 8 லட்சத்து 40 ஆயிரம்) ரூபாய்க்கான காசோலையை ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர்கள் கே. ஜவரிலால் ஜெயின் ஜே. கே. என். பழனி ஆகியோர்களிடம் வழங்கினார்.
குடியாத்தம் ரோட்டரி சங்கத் தலைவர் சி. கண்ணன் முன்னாள் தலைவர்கள் டி. என். ராஜேந்திரன் சி. கே. வெங்கடேசன் வருங்கால தலைவர்கள் கே. சந்திரன் டி. எஸ். விச்சத்திரன் செயலாளர் பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments