வயநாடு இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தியை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை பரப்புரை.
கேரளம் வயநாடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பாக போட்டியிடும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்களை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் கு.செல்வப் பெருந்தகை எம்எல்ஏ அவர்கள் ஒரு டீ ஸ்டாலில் கட்டன் சாயா என்கிற டீ செய்து கொடுத்து கை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.
வயநாடு தொகுதி நெடும் பாலா மேப்பாடி பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் கு.செல்வ பெருந்தகை அவர்களுடன் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் அவர்களும் மற்றும் நெல்லை பாராளுமன்ற உறுப்பினர் Adv C.ராபர்ட் புரூஸ் அவர்களும் தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு வாக்குகளை சேகரித்தார்.
No comments