கல்வியாளரும், தொழில் முனைவோருமான டாக்டர் அருண்குமார் சாந்தலிங்கத்திற்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியே விருது.!!
செவாலியே என்பது உலகின் பல பகுதிகளில் இயங்கிவரும் முன்னணி மனிதர்களை பெருமைப்படுத்தும் வகையில் பிரெஞ்சு அரசாங்கம் 1957இல் இருந்து ஆண்டுதோறும் வழங்கி வரும் மிக உயர் விருது ஆகும்.
அந்த வகையில் புதுச்சேரியை சேர்ந்த டாக்டர் அருண்குமார் சாந்தலிங்கத்திற்கு, பிரெஞ்சு மொழி மற்றும் கலாச்சாரத்தை இந்தியா மற்றும் உலகளாவிய பிரெஞ்சு மொழி பேசும் நாடுகளில் மேம்படுத்திய பங்களிப்பிற்காக செவாலியே விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து புதுச்சேரி பிரெஞ்சு தூதரகத்தில் நடைப்பெற்ற விழாவில் ,டெல்லியில் உள்ள பிரெஞ்சு தூதரகத்தின் பிரெஞ்சு நிறுவன இயக்குநரும், கலாச்சார ஒத்துழைப்புக்கான ஆலோசகருமான கிரிகோர் ட்ரூமல் செவாலியே விருதை அருண்குமார் சாந்தலிங்கத்திற்கு வழங்கி பாராட்டி பேசினார்.
விழாவில் பிரெஞ்சு அரசின் கல்வி ஒத்துழைப்புக்கான அலுவலர் ஸ்டெபானி ஓர்ஃபிலா, இந்தியாவில் உள்ள அல்லியான்ஸ் பிரான்சேஸ்களின் ஒருங்கிணைப்பாளர் எமிலி ழகமான், பாண்டிச்சேரி அலையான்ஸ் பிரான்சே தலைவர் டாக்டர் சதீஷ் நல்லாம், புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments