சீர்காழியில் மது போதையில் பேருந்து இயக்கம். தனியார் பேருந்து ஓட்டுனருக்கு கருவி மூலம் பரிசோதனை செய்து அபராதம் விதித்த போக்குவரத்து போலீசார்..
சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் தஞ்சாவூரிலிருந்து சீர்காழி நோக்கி வந்த தனியார் பேருந்தும், பழையாரிலிருந்து சீர்காழி வந்த அரசு பேருந்தும் ஒரே நேரத்தில் உள்ளே நுழைய முற்பட்ட கு உள்ளே செல்ல முடியாமல் இரண்டு பேருந்துகளும் வழியிலேயே நின்றது.அப்போது தனியார் பேருந்து ஓட்டுநர் அரசு பேருந்து உள்ளே நுழைய விடாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட வாகன ஓட்டிகள் பேருந்து நிலையத்தில் இருந்த ஆட்டோ ஓட்டுநர்கள் தனியார் பேருந்து ஓட்டுனரிடம் பேருந்தை எடுக்க கூறினர்.
அதற்கு தனியார் பேருந்து ஓட்டுனர் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களிடம் கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது. தனியார் பேருந்து ஓட்டுனர் மதுபோதையில் இருப்பதாக பொதுமக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதையடுத்து இது குறித்து சீர்காழி போக்குவரத்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்படி அங்கு வந்த போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வேல்முருகன் மற்றும் போலீசார் தனியார் பேருந்து ஓட்டுனரிடம் மது போதையில் உள்ளாரா என கருவி மூலம் பரிசோதனை செய்தார். சோதனையில் ஓட்டுநர் கும்பகோணம் தாராசுரம் பகுதியைச் சேர்ந்த தீனதயாளன் (32) மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அவர் மேற்கொண்டு பேருந்தை இயக்க அனுமதி மறுத்து அவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்தார். சீர்காழி பேருந்து நிலையத்தில் மது போதையில் பேருந்தை இயக்கி வந்ததோடு அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் பொதுமக்களிடம் தனியார் பேருந்த ஓட்டுனர் வாக்குவாதம் செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
No comments