Breaking News

நவம்பர் 21 இரவு முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்ல வேண்டாம்..?

 


மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக குறிப்பாக கடலோரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் வானிலை அறிவிப்பின்படி வங்க கடற் பகுதியில் நவம்பர் 22 அன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நவம்பர் 21 அன்று இரவு முதல் மறு அறிவிப்பு வரும் வரை மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் மோகன் குமார் மயிலாடுதுறை மாவட்ட அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்துகளுக்கும் அறிவிப்பு அனுப்பி உள்ளார் இதன்படி நவம்பர் 21 இரவு முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அனைத்து மீன்பிடி படகுகளும் கரையில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

No comments

Copying is disabled on this page!