மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் உத்தரவு.
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு இடங்களில் அவ்வப்பொழுது விட்டுவிட்டு மிதமான மற்றும் கனமழை பெய்து வந்தது குறிப்பாக தரங்கம்பாடி சீர்காழி கடலோரப் பகுதிகளில் மிதமான மற்றும் கனமழை பெய்து வந்தது இந்நிலையில் நேற்று இரவு முதல் மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது தரங்கம்பாடி தாலுகாவில் கடலோர பகுதிகளில் இரவு முழுவதும் விடிய விடிய மிதமான மழை பெய்தது தொடர் மழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று 13.11.2024 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
No comments