ஈரோட்டில் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக மிரட்டல்.
ஈரோட்டில் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் தங்கும் விடுதியில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக வந்த மிரட்டலை தொடர்ந்து போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் தீவிர சோதனை நடத்தினர்.
ஈரோடு சத்தி சாலையில் இயங்கி வரும் ரத்னா ரெசிடென்சி தங்கும் விடுதியில் இமெயில் முகவரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது இரவு 10 மணிக்குள் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர் அதில் மிரட்டல் விடுத்திருந்தார் இதனால் அதிர்ச்சி அடைந்த விடுதி நிர்வாகத்தினர் உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் இதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஈரோடு வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து மெட்டல் டிடெக்டர் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தினர் 30 அறைகளைக் கொண்ட தங்கும் விடுதியில் 25 அறைகளில் வாடிக்கையாளர்கள் தங்கி இருந்தனர் எனினும் அவர்கள் யாரும் வெளியேற்றப்படவில்லை தொடர்ந்து நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது.
No comments