பிள்ளை பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவியின் அதிகார துஷ்பிரயோகத்தை கண்டித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.
திருக்கடையூரில் பிள்ளை பெருமா நல்லூர் ஊராட்சி மன்ற தலைவியின் அதிகார துஷ்பிரயோகத்தை கண்டித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பிள்ளை பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவியாக தீபா முனுசாமி உள்ளார் இவர் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு திமுகவிற்கு மாறியுள்ளார் இந்நிலையில் பிள்ளை பெருமா நல்லூர் ஊராட்சி மன்ற தலைவியின் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நிர்வாக சீர்கேட்டை கண்டித்து திருக்கடையூர் கடைவீதியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது செம்பனார் கோவில் தெற்கு ஒன்றிய அதிமுக துணை செயலாளர் குமார் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், வடக்கு ஒன்றிய செயலாளர் ஜனார்த்தனம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர் கூட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டு பிள்ளை பெருமாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அதிமுகவினரின் போராட்டத்தை ஒட்டி திருக்கடையூர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
No comments