Breaking News

தூத்துக்குடியில் புதிய தார்சாலை அமைக்கும் பணியினை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியாசமி நேரில் ஆய்வு.


தூத்துக்குடி அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே நடைபெற்று வரும் புதிய சாலை அமைக்கும் பணியினை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

பெருகிவரும் மக்கள்தொகை பெருக்கக்திற்கு ஏற்பவும், வாகனங்களின் அதிகரிப்பாலும், தூத்துக்குடியில் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. மாநகரில் போக்குவரத்து நெருக்கடியை கட்டுப்படுத்தும் வகையில் புதிய சாலைகன் அமைத்தல், குறுகிய சாலைகளை அகலப்படுத்துதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது. அதேபோல் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி-பாளை மெயின்ரோட்டில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வ.உ.சி கல்லூரி அருகில் கணேஷ்நகர் திரும்பும் இடத்தில் இருந்து அரசு பாலிடெக்னிக் கல்லூரி வரை புதிய தார் சாலை அமைக்கப்படுகிறது. 

இந்த பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு முக்கிய சாலைகளையும், சந்திப்புகளையும் அகலப்படுத்தியும், மாநகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் புதிய வழித்தடங்களை உருவாக்கியும் வருகிறோம். அதன் ஒரு பகுதியாக கணேஷ்நகர் முதல் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி வரை புதிய சாலை அமைக்கப்படுகிறது. இதன் மூலம் பாளை ரோட்டில் செல்லும் வாகனங்கள் அதற்கு இணைப்புச் சாலையாக அமைக்கப்படும். இந்த சாலையை பயன்படுத்தும் போது போக்குவரத்து நெருக்கடி குறையும் என்றார்.

இந்த ஆய்வின் போது, போல்பேட்டை திமுக பிரதிநிதிகள் பிரபாகரன், ஜேஸ்பர் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர். 

No comments

Copying is disabled on this page!