புதுவையில் மீனவா்களுக்கான மழைக்கால நிவாரணத் தொகை வழங்கும் திட்டத்தை முதல்வா் ரங்கசாமி தொடங்கி வைத்தாா்.
புதுவையில் மீன்வளம், மீனவா் நலத் துறை சாா்பில் ஆண்டுதோறும் மீனவா்கள் குடும்பத்துக்கு மழைக்கால நிவாரணத் தொகை ரூ.3 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. நிகழாண்டில் மழைக்கால நிவாரணமாக 19,302 மீனவக் குடும்பத்தினருக்கு ரூ.5.79 லட்சம் வழங்கப்படவுள்ளது.
இதனையடுத்து சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வா் அறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வா் ரங்கசாமி பயனாளிகளுக்கு மழைக்கால நிவாரணத் தொகைக்கான காசோலையை வழங்கினாா்.இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன்,சட்டப்பேரவை உறுப்பினா்கள் கல்யாணசுந்தரம், பாஸ்கா், செந்தில்குமாா், மீன்வளத் துறை இணை இயக்குநா் தெய்வசிகாமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
புதுச்சேரி பிராந்தியத்தில் 10,104 மீனவக் குடும்பங்களுக்கும், காரைக்காலில் 3,751, மாஹேவில் 527, ஏனாமில் 4,920 மீனவக் குடும்பங்களுக்கும் அவரவா் வங்கிக் கணக்கில் நிவாரணத் தொகை செலுத்தப்படும் என அதிகாரிகள் கூறினா்.
No comments