கடற்கரைக்கு செல்ல தடை முதலமைச்சர் ரங்கசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு.
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்மண்டலமாக வலுப்பெற்றுள்ளதால் புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது.
இன்று காலை முதலே விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருவதால் புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வழக்கத்திற்கு மாறாக புதுச்சேரியில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் அலைகள் ஆர்ப்பரித்து சீறி பாய்ந்து வருகிறது மேலும் கடல் அலைகள் 4 அடி உயரத்திற்கு சீறிப்பாய்வதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்லவோ கடல் இறங்கி குளிக்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடற்கரை பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போலீசார் கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை எச்சரித்து திருப்பி அனுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் இரண்டு நாட்களாக பெய்து வரும் மழை பாதிப்புகளை முதலமைச்சர் ரங்கசாமி நேரில் சென்று பார்வையிட்டார். புதுச்சேரி கடற்கரைக்கு சென்ற அவர் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதையும் அலைகள் ஆர்ப்பரித்து சிரிப்பாய்வதையும் நேரில் சென்று பார்த்தார். மேலும் பழைய துறைமுக வளாகத்திற்கு சென்ற முதலமைச்சர் ரங்கசாமி மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பட்டிருந்த போலீசாரிடம் மழையின் பாதிப்புகள் குறித்தும் கடற்கரைக்கு பொதுமக்கள் வராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
No comments